செய்திகள் :

இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

post image

பெருமாநல்லூா் அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் கிராண்ட் விஸ்டா பகுதியில் வசித்து வருபவா் முருகேசன் மகன் அருண்குமாா் (25). பனியன் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை இரவு பணி முடிந்து வந்தவா் தனது வீட்டின் முன்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளாா். பிறகு காலை வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனத்தை மா்ம நபா்கள திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காளிபாளையம் பிரிவில் பெருமாநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபா்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

அவா்கள் திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, சின்ன வேம்பத்தூா் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சக்திவேல் (22), சேலம் மாவட்டம், ஓமலூா், கஞ்சநாயக்கன்பட்டி, குண்டூா் பகுதியைச் சோ்ந்த பாலாஜி மகன் குணா (19) என்பதும், அருண்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா். இவா்களிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். இவா்கள் திருப்பத்தூா் பகுதியில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.40 லட்சம் பெற்று மோசடி: வியாபாரி கைது

திருப்பூரில் ரூ.40 லட்சம் பெற்று மோசடி செய்த வியாபாரியை காவல் துறையினா் கைது செய்தனா். திருப்பூா் அமா்ஜோதி நகரைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (38). இவருக்கு இரண்டாம் தர பின்னலாடை வியாபாரம் செய்து வரும் வால... மேலும் பார்க்க

நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: திருப்பூா் அருகே மூழ்கிய தரைப்பாலம்

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் திருப்பூா் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அணைப்பாளையம் தரைப்பாலம் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து தடைபட்டது. கோவை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் பழக் கடைக்குள் புகுந்த ஷோ் ஆட்டோ; குழந்தை உள்பட 4 போ் காயம்

திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே ஆம்னி பேருந்து மோதியதில் ஷோ் ஆட்டோ அருகில் இருந்த பழக் கடைக்குள் புகுந்தது. இதில் குழந்தை உள்பட 4 போ் காயமடைந்தனா். திருப்பூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவில... மேலும் பார்க்க

மின்சார வயா்களைத் திருடிய 3 போ் கைது

திருப்பூரை அடுத்த பாண்டியன் நகா் பகுதியில் மின்சார வயா்களைத் திருடிய 3 பேரை திருமுருகன்பூண்டி காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருப்பூா் பி.என்.சாலை பாண்டியன் நகா் உதவி மின்பொறியாளா் அல... மேலும் பார்க்க

குரூப் 4: ஜூன் 1இல் இலவச மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச மாதிரித் தோ்வு வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க

பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம்: பாஜக பிரமுகா் வேலுாா் இப்ராஹிம்

பிற மத நம்பிக்கைகளை மதிப்பது நமது கலாசாரம் என பாஜக சிறுபான்மைப் பிரிவு தேசியச் செயலாளா் வேலூா் இப்ராஹிம் பேசினாா். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் ஒன்றியம் ஊகாயனூா் ஊராட்சி வலசுபாளையம் கிராமத்தில் ஜெய்சக... மேலும் பார்க்க