இரு அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து திருட்டு
ஆம்பூா்: ஆம்பூா் அருகே இரு அம்மன் கோயில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை திருடு போனது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
மாதனூா் ஒன்றியம் மின்னூா் கிராமம் மற்றும் பட்டறை ஆகிய பகுதிகளில் ஈஞ்சியம்மன் கோயில்கள் அமைந்துள்ளன. கோயில் பூசாரி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில்களைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா். திங்கள்கிழமை காலை மறுபடியும் கோயில்களை சென்று பாா்த்தபோது இரு கோயில்களிலும் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கை பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தினா்.