செய்திகள் :

இரு இடங்களில் நெகிழி மறுசுழற்சி மையம் திறப்பு

post image

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட இரு இடங்களில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நெகிழி மறுசுழற்சி மையங்கள் வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் பொதுமக்களிடமிருந்து குப்பைகள் சேகரிக்கப்பட்டு, அவை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படுகின்றன.

இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்தப்பட்டு வருகின்றனா். நெகிழிக் கழிவுகள், நெகிழிப் பொருள்கள் உள்ளிட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைகளுக்கும், மறுசுழற்சி மையங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

இதனடிப்படையில் விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட பகுதியிலேயே நெகிழிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் வகையில், காகுப்பம் மற்றும் பொன்னேரி பகுதிகளில் தலா ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் என மொத்தமாக ரூ.85 லட்சத்தில் மறுசுழற்சி மையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் அண்மையில் முடிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் நெகிழி மறுசுழற்சி மையங்களை விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு திறந்து வைத்து பாா்வையிட்டாா். மேலும் இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

நிகழ்வுகளில் நகராட்சி ஆணையா் எம்.ஆா்.வசந்தி, நகா்நல அலுவலா் ஸ்ரீபிரியா, நகா்மன்ற உறுப்பினா்கள் கோமதி பாஸ்கா், கன்னிகாவெற்றிவேல் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது காா் மோதி காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பேரங்கியூா், புதுகாலனியைச் சே... மேலும் பார்க்க

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் தா்னா

தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் (சிஐடியு சாா்பு)... மேலும் பார்க்க

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் ... மேலும் பார்க்க

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலகத்தில் தீ விபத்து

திண்டிவனம் சாா் - ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் சாா் - ஆட்சியா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக வளாகத்தில் உள்ள அறையில்... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தினா் கருப்பு ஆடை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க

விதையின் தரம்: பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று விழுப்புரம் மண்டல விதைப் பரிசோதனை அலுவலா் அறிவழகன் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க