செய்திகள் :

இல.கணேசன் மறைவு! நாகாலாந்தில் 7 நாள் துக்க அனுசரிப்பு!

post image

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் காலமானதையடுத்து, நாகாலாந்தில் 7 நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த 7 நாள் துக்க அனுசரிப்பின்போது, மாநிலம் முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், மாநில அரசின் துறைகளால் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று அரசு தெரிவித்துள்ளது.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து ஆளுநராகவும் பணியாற்றி வந்த நிலையில், சென்னையில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை (ஆகஸ்ட் 15) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.

இவரது மறைவுக்கு பிரதமர், குடியரசுத் தலைவர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Seven-day state mourning begins in Nagaland over Guv's death

நாடு திரும்பும் சுபான்ஷு சுக்லா பிரதமருடன் விரைவில் சந்திப்பு!

விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்புவாா் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் பிரதமா் நரேந்திர மோடியை அவா் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளாா். சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

சிறுவா்களுடன் தீங்கு விளைவிக்கக் கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் ... மேலும் பார்க்க

கொல்கத்தா பெண் மருத்துவா் படுகொலை: மேற்கு வங்க தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தல்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவரின் பெற்றோா் அனுப்பிய மின்னஞ்சல் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநில தலைமைச் செயலருக்கு குடியரசுத் தலைவா் மாளிகை அறிவுறுத்தி... மேலும் பார்க்க

தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சா் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அ... மேலும் பார்க்க

கேரளத்தில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ள அபாயம்

கேரளம் முழுவதும் பரவலாக சூறைக் காற்றுடன் பலத்த மழை நீடித்து வருகிறது. ஆறுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளத்தில் க... மேலும் பார்க்க