நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்...
இளைஞா் தாக்கப்பட்ட விவகாரம்: முதல்நிலைக் காவலா் ஆயுதப் படைக்கு மாற்றம்
கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் இளைஞா் தாக்கப்பட்டது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, அந்தக் காவல் நிலைய முதல்நிலைக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக மணிகண்டன் பணியாற்றினாா். இவா், ஜூலை 6-ஆம் தேதி அந்த காவல் நிலையத்துக்கு வந்த கணங்கூா் கிராமத்தைச் சோ்ந்த மலையன் மகன் விக்கி (எ) செந்தில்குமாரை தாக்கியது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை பரவியது.
இதையடுத்து, மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி முதல்நிலைக் காவலா் மணிகண்டனை மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டாா். மேலும், இந்த சம்பவத்தில் தொடா்புடைய மற்ற காவலா்களின் செயல்பாடுகள் குறித்து விசாரிக்க கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டாா்.