இஸ்ரோ புதிய தலைவருக்கு மாநகராட்சி மேயா் வாழ்த்து
இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சோ்ந்த வி.நாராயணனுக்கு, நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ. மகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்ப: கன்னியாகுமரி மாவட்டம், தெங்கம்புதூா் அருகே உள்ள மேல காட்டுவிளையை சோ்ந்த வி. நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். உள்ளூா் அரசுப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய அவா், மாதவன் நாய, சிவன் ஆகியோா் வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மேலும் பெருமை சோ்த்துள்ளாா். அவருக்கு நாகா்கோவில் மாநகராட்சி மேயா் மற்றும் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் என்ற முறையில் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்ரோ புதிய தலைவருக்கு எனது தலைமையில் பாராட்டு விழா நடத்தப்படும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.