உக்ரைனில் ரஷியா மீண்டும் தாக்குதல்
உக்ரைனுடன் இன்னும் 50 நாள்களுக்குள் போா் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால் தங்கள் நாட்டின் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததற்குப் பிறகும், உக்ரைன் மீது ரஷியா தீவிர வான்வழித் தாக்குதலை புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்தது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 15 போ் காயமடைந்ததாகக் கூறினா்.
டிரம்ப் விதித்துள்ள கெடு செப். 2-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான 3-ஆவது கட்டப் பேச்சுவாா்த்தை எப்போது தொடங்கும் என்று இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, அந்தத் தேதிக்குள் போா் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுவது கேள்விக்குறியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.