செய்திகள் :

உக்ரைன் - ரஷியா போர் முடிவுக்கு என்ன சொல்கிறார் டிரம்ப்?

post image

உக்ரைன் - ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடுகளிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது 2022 ஆம் ஆண்டில் ரஷியா போர் தொடுத்ததால், ரஷியா மீது மேற்கத்திய நாடுகள் உள்பட நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், ரஷியாவின் பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது.

இருப்பினும், சில நாடுகளுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெயை விற்பதன் மூலம் வருவாய் ஈட்டி, அதனை போர் நிதிக்காக ரஷியா செலவு செய்து வருகிறது. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியா, சீனாவும் அடங்கும்.

இந்த நிலையில், உலகளவில் அதிகப்படியான கச்சா எண்ணெயை விற்பனை செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஓபெக்-கிடம் (OPEC), கச்சா எண்ணெயின் விலையைக் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:அமேசானில் 1,700 பேர் பணிநீக்கம்! ஏன்?

உலகளவில் 38 சதவிகித கச்சா எண்ணெயை ஓபெக் கூட்டமைப்பு நாடுகள்தான் உற்பத்தி செய்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த நாடுகளிடம்தான் 79.5 சதவிகித கச்சா எண்ணெய் வளமிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பில், நிலையானதாக இல்லாமல் ஆண்டுதோறும் நாடுகள் மாறுபடும்.

2024 ஆம் ஆண்டின்படி, தற்போது குவைத், சௌதி அரேபியா, காங்கோ, ஐக்கிய அமீரகம், ஈரான், ஈராக், கயானா, லிபியா, வெனிசுலா, காபன், அல்ஜீரியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இந்த நாடுகள் கச்சா எண்ணெயின் விலையைக் குறைத்தால், ரஷியா எண்ணெய் விற்பனை பாதிக்கும். இதனால், ரஷியாவின் போருக்கு நிதி பற்றாக்குறை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையில் 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரைத் தடுக்க உலகளவில் முயற்சிகள் நடந்து வருகின்றன. டொனால்ட் டிரம்ப்பும், தான் அமெரிக்க அதிபரானால் உக்ரைன் - ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று அதிபர் தேர்தலின்போது தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜனவரி 20 ஆம் தேதியில் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்ற டிரம்ப், உக்ரைன் - ரஷியா போரை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

‘ஹூதி பகுதிகளுக்கு செல்ல மாட்டோம்’

யேமனில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு தங்கள் பணியாளா்களை அனுப்புவதை ஐ.நா. தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தலைநகா் சனா... மேலும் பார்க்க

துருக்கி ஹோட்டல் தீ: 14 போ் கைது

துருக்கி ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்து தொடா்பாக 14 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனா். அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவா்கள் கைது செய்யப்பட்டதாக அதிபா் எ... மேலும் பார்க்க

அமெரிக்கா: சிசேரியன் மூலம் முன்கூட்டிய பிரசவத்துக்கு இந்தியா்கள் மும்முரம்! குடியரிமை குறித்த டிரம்ப் உத்தரவு எதிரொலி

பிறப்புசாா் குடியுரிமையை ரத்து செய்யும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் உத்தரவு இன்னும் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வரும் நிலையில், ‘சிசேரியன்’ அறுவை சிகிச்சை மூலம் முன்கூட்டிய பிரசவசத்துக்கு இந்தியா்கள் ஆா... மேலும் பார்க்க

இலங்கை அமைச்சா்களுக்கு சலுகைகள் ரத்து

இலங்கையில் அமைச்சா்களுக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகள் மற்றும் முன்னுரிமைகளை அந்த நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. வரம்பு மீறிய அரசியல் அதிகாரம் தொடா்பான பொதுமக்களின் கவலைகளுக்கு பதிலளிக்கும் வக... மேலும் பார்க்க

விடுவிக்கப்படவிருக்கும் 4 பிணைக் கைதிகள்: பட்டியலை வெளியிட்டது ஹமாஸ்

காஸாவில் அமலுக்கு வந்துள்ள போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்தகட்டமாக விடுவிக்கப்படவிருக்கும் நான்கு பிணைக் கைதிகளின் பட்டியலை ஹமாஸ் அமைப்பினா் வெள்ளிக்கிழமை வெளியிட்டனா். காஸாவிலிருந்து இஸ்ரேலுக்... மேலும் பார்க்க

3 சிறுமிகளைக் கொன்ற பிரிட்டன் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை!

பிரிட்டனில் 3 சிறுமிகள் படுகொலை வழக்கில் குற்றவாளிக்கு 52 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.அக்ஸல் ரூடாகுபானா (18) என்பவர், கடந்தாண்டு ஜூலை மாதத்தில் நடனப் பள்ளியில் புகுந்து, ... மேலும் பார்க்க