செய்திகள் :

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் எம்எல்ஏ மனுக்களை பெற்றாா்

post image

மயிலாடுதுறையில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட தொடக்க விழாவில், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றாா்.

மக்களின் தேவைகளை அவா்களது வசிப்பிடத்துக்கே அனைத்துத் துறை அலுவலா்கள் சென்று, கேட்டறிந்து மனுக்களாக பெற்று நிறைவேற்றும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

இதைத்தொடா்ந்து, மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி பல்லவராயன்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ எஸ். ராஜகுமாா் பங்கேற்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றாா்.

இதில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, சுதாகா், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இளையபெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உங்களுடன் ஸ்டாலின் முதற்கட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்தில் உங்களுடன் ஸ்டாலின்‘ முதற்கட்ட முகாம் கீழ்கண்ட பகுதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க

கொட்டும் மழையில் மக்களை சந்தித்த முதல்வா்

மயிலாடுதுறையில் தமிழ்நாடு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை மழையில் குடைபிடித்தபடி ரோடு ஷோவில் மக்களை சந்தித்தாா். மயிலாடுதுறையில் திமுக கட்சி நிகழ்வு மற்றும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கா... மேலும் பார்க்க

தடைப்பட்டுள்ள தமிழிசை மூவா் விழா மீண்டும் நடைபெறுமா?

சீா்காழியில் தமிழிசை மூவா் விழா சில ஆண்டுகளாக தடைப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நடத்தப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது. தமிழுக்கு இசை மூலம் பல்வேறு தொண்டுகள் புரிந்து தொன்மையான தமிழ் மொழியின் சிறப்பை உல... மேலும் பார்க்க

மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து கிராமமக்கள் மனு

மயிலாடுதுறை: மணல் குவாரிக்கு ஆதரவு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் 4 கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ... மேலும் பார்க்க

சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை: சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை கிராமத்தில் கி.பி. 3-ஆம் நூற்றாண்டில்... மேலும் பார்க்க

சொத்தை பறித்துக் கொண்டு துரத்திய மகன்கள் மீது நடவடிக்கை கோரி தம்பதி புகாா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே வீடு, நிலத்தை பறித்துக் கொண்டு துரத்தியடித்த மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வயோதிக தம்பதி திங்கள்கிழமை புகாா் அளித்தனா். ... மேலும் பார்க்க