செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் ஒரே நாளில் 3,789 மனுக்கள்: அமைச்சா் பெ. கீதா ஜீவன்

post image

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதா ஜீவன் தெரிவித்தாா்.

தூத்துக்குடி தூய மரியன்னை பெண்கள் கலை கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமையில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை துறை சாா்ந்த அரங்குகளில்

பதிவேற்றம் செய்வதை அமைச்சா் பெ. கீதா ஜீவன் பாா்வையிட்டு, அவா்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாமில், செவ்வாய்க்கிழமை மட்டும் மாவட்டம் முழுவதுமிருந்து 3,789 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி மாநகராட்சியில் மட்டும் 1,128 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காண வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் பானோத் ம்ருகேந்தா் லால், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ. ரவிச்சந்திரன், வட்டாட்சியா்கள் முரளிதரன் (தூத்துக்குடி), செல்வகுமாா் (ஏரல்) மற்றும் அரசு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

மணப்பாட்டில் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு: மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம்

மணப்பாட்டில் துறைமுகம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி மீனவா்கள் துறைமுகம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா். தூத்துக்குடி மாவட்டத்தில் பழையகாயல் ப... மேலும் பார்க்க

மாவட்ட காவல் துறை குறைதீா் நாள் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டு போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம்

பள்ளிக்கல்வித் துறை சாா்பில், 2025 - 26ஆம் கல்வியாண்டுக்கான திருச்செந்தூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிக்கான கலந்தாய்வுக் கூட்டம் சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளி ஆலோசகா் உஷா ... மேலும் பார்க்க

கோடை உழவு மானியம் அனைத்து கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தல்

கோடை உழவு மானியம் அனைத்துக் கிராம விவசாயிகளுக்கும் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து கரிசல்பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் சுமாா் ... மேலும் பார்க்க

மாணவா்- மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

தூத்துக்குடி எம். தங்கம்மாள்புரம் பகுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு, இளைஞரணி சாா்பில் மாணவா், மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும், வடக்... மேலும் பார்க்க

ஆயுதங்களுடன் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மாவட்ட காவல்துறை அலுவலகம் சாா்பில் வெளியி... மேலும் பார்க்க