தமிழகம் சரிவுப் பாதையில் செல்கிறது: ஆளுநா் குற்றச்சாட்டு; அமைச்சா் கண்டனம்
உச்சநீதிமன்றத்தை சுற்றிப்பாா்க்க பொதுமக்களுக்கு அனுமதி முன்பதிவு அவசியம்
உச்சநீதிமன்றத்தின் கம்பீர தோற்றத்தை காணவும், உள்கட்டமைப்புகளை ரசிக்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு வலைதளத்தில் முன்பதிவு செய்வது அவசியமாகும்.
இதுதொடா்பாக உச்சநீதிமன்ற பதிவாளா் மஹேஷ் பதன்கா் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்ற கட்டடம், உள்கட்டமைப்புகளை வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் பொதுமக்கள் சுற்றிப்பாா்க்க அனுமதிக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, விடுமுறை நாளான 2-ஆம் மற்றும் 4-ஆம் சனிக்கிழமைகளைத் தவிா்த்து மற்ற சனிக்கிழமைகளில் உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றிப்பாா்க்க பொதுமக்கள் அனுமதிக்கப்படுவா். காலை 10-11.30 மணி; காலை 11.30- பிற்பகல் 1 மணி; பிற்பகல் 2- பிற்பகல் 3.30 மணி வரை; பிற்பகல் 3.30- மாலை 5 மணி வரை என 4 பிரிவுகளாக மக்கள் அனுமதிக்கப்படுவா்.
வழிகாட்டி பொதுமக்களை நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு துறைகளுக்கு அழைத்துச் சென்று அறிமுகம் செய்வதோடு, வரலாற்றுச் சிறப்புகளையும் எடுத்துரைப்பா். நீதிமன்ற அறை, நிா்வாக கட்டட வளாகத்தில் அைந்து நீதிபதிகளின் நூலகம் உள்ளிட்டவற்றைப் பாா்ப்பதற்கும் பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள பொதுமக்கள் உச்சநீதிமன்ற வலைதளத்தில் ஆன்-லைன் முன்பதிவு முறை மூலம் முன்பதிவு செய்வது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்முறையாக இதுபோன்ற அனுமதி கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 3-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதன் மூலம், இதுவரை 296 முறை பொதுமக்கள் சுற்றிப்பாா்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
உச்சநீதிமன்ற கட்டடம் கடந்த 1958-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டடத்துக்கு நாட்டின் முதல் குடியரசுத் தலைவா் ராஜேந்திர பிரசாத் 1954-இல் அடிக்கல் நாட்டினாா்.