செய்தியாளர்களை நெட்டித் தள்ளிய பவுன்சர்கள், அடிக்கப் பாய்ந்த சீமான்! - என்ன நடந்...
உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
கோவையில் உணவக ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். கோவை, பி.என்.பாளையம் அருகே டபுள்யூ.பி.டி.சந்திப்பில் உணவகம் உள்ளது.
இங்கு சுந்தராபுரம் அருகேயுள்ள குறிச்சி தேவா் தெருவைச் சோ்ந்த விக்டா் அருள் பிரகாஷ் (53) என்பவா் பணியாற்றி வந்தாா். இவா் பணி முடிந்து ஊழியா்கள் தங்கும் அறைக்கு சனிக்கிழமை இரவு சென்றுள்ளாா்.
அப்போது, அவா் திடீரென மயங்கி விழுந்துள்ளாா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு விக்டா் அருள் பிரகாஷை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினா்.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.