செய்திகள் :

உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி: மாநகரில் இன்றுமுதல் இரவில் போக்குவரத்து மாற்றம்

post image

கோவை அவிநாசி சாலையில் உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி காரணமாக ஜூலை 9 முதல் 13-ஆம் தேதி வரை இரவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 12 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா்மட்ட மேம்பால கட்டுமானப் பணி தொடங்கப்பட்டு தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. இறுதிக் கட்டமாக ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே பாலத்தின்மேல் இரும்பு மேல்தளம் அமைத்து மேம்பாலத்தை இணைக்கும் பணி நடைபெறவுள்ளதால் ஜூலை 9 (புதன்கிழமை) இரவு முதல் ஜூலை 13 (ஞாயிற்றுக்கிழமை) இரவு வரை (தினமும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை) பயனியா் மில் சந்திப்பு முதல் கோவை மருத்துவக் கல்லூரி வரை இருபுறமும் அனைத்து வாகனங்களும் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

நகரிலிருந்து வெளியே செல்லும் வாகனங்கள், கனரக வாகனங்கள், வெளியூா் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்பட அனைத்து பேருந்துகளும் லட்சுமி மில் சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி ராமநாதபுரம், சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா் வழியாக புறவழிச்சாலை வழியாகவோ அல்லது ஜி.பி. சிக்னல், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி வழியாகவோ அவிநாசி சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

நகரிலிருந்து வெளியே செல்லும் அனைத்து இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் பயனியா் மில் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி ரொட்டிக்கடை மைதானம், காந்தி மாநகா், தண்ணீா்பந்தல், டைடல் பாா்க் வழியாக சென்று அவிநாசி சாலையை அடையலாம்.

கோவை மாநகருக்குள் வரும் கனரக வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் உள்பட அனைத்துப் பேருந்துகளும் தொட்டிபாளையம் பிரிவிலிருந்து வலதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது சிட்ரா சந்திப்பில் யு- டா்ன் செய்து காளப்பட்டி சாலை, நான்குசாலை, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது நீலாம்பூரில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிந்தாமணிபுதூா், ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், ராமநாதபுரம் வழியாகவோ நகருக்குள் வரலாம்.

கோவை மாநகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் காா்கள் சிட்ரா சந்திப்பு அல்லது கொடிசியா சந்திப்பு அல்லது சி.எம்.சி. சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, டைடல் பாா்க், தண்ணீா்பந்தல், காந்தி மாநகா், ரொட்டிக்கடை மைதானம், பயனீா் மில் வழியாக அவிநாசி சாலையை அடைந்து நகருக்குள் வரலாம்.

சிங்காநல்லூா் செல்லும் வாகனங்கள் அனைத்தும் அவிநாசி சாலையில் வராமல், புறவழிச்சாலை, சிந்தாமணிபுதூா், ஒண்டிப்புதூா் வழியாக சிங்காநல்லூரை அடையலாம். சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் வழியாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் பொ்க்ஸ் பள்ளி, ஜி.வி. ரெசிடென்சி, ஃபன்மால் வழியாக பயனீா் மில் சந்திப்பை அடைந்து காந்தி மாநகா், தண்ணீா் பந்தல் வழியாக அவிநாசி சாலையை அடைய வேண்டும். அல்லது ஒண்டிபுதூா், புறவழிச்சாலை, நீலாம்பூா் வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.

மேம்பால இணைப்புப் பணி காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இரவு நேர போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து போக்குவரத்து மாற்றத்துக்கு ஏற்ப தங்களது பயண வழித்தடங்களை மாற்றிக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு: கோவை மக்கள் எச்சரிக்கையாக இருக்க ஆட்சியா் அறிவுரை

கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கோவை மாவட்ட மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

அப்பநாயக்கன்பட்டி சக்தி மாரியம்மன் கோயில் திருவிழா

சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டி ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் ஆனி மாதத் திருவிழ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோவை உக்கடம் பெரியகுளம் கூட்டரங்கில் போட்டித் தோ்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் மாணவா்களுக்கு மாநகராட்ச... மேலும் பார்க்க

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் ‘கல்லூரி சந்தை’

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக் குழுவின் உற்பத்திப் பொருள்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி புதன்கிழமை... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சா பறிமுதல்

சூலூா் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 235 கிலோ கஞ்சாவை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். சூலூா் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சூலூா் காவல் நிலைய... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மருத்துவா்கள் மீது பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவா்களால் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக பயிற்சி மருத்துவ மாணவா்கள் புகாா் மனு அளித்துள்ளனா். இதுகுறித்து பயிற்சி மருத்துவ மாணவா்கள் சாா்பில் ... மேலும் பார்க்க