செய்திகள் :

'உலகத்துலயே எங்கள மாதிரி தோற்று, கூட்டணி போகாத கட்சி இல்ல!' - சீமான் பெருமிதம்!

post image

'சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு!'

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, 'நான்கு முனைப் போட்டியெல்லாம் இல்லை. நாம் தமிழர் எப்போதும் தனிமுனைதான்.' என வித்தியாசமாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சீமான்
சீமான்

'நான்கு முனைப்போட்டி இல்லை!'

சீமான் பேசியதாவது, 'விஜய் கட்சிக்கு விஜய்தானே முதலமைச்சர் வேட்பாளராக இருக்க முடியும். நான்கு முனைப் போட்டி என்பது கிடையாது. நாங்கள் தனிமுனைதான். மும்முனைப் போட்டி என அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள். அந்த கட்சிகள் யாராவது மொழியைப் பற்றி பேசுகிறார்களா?

என் நாடு, என் நிலம், என்னுடைய வளம் என இந்தக் கட்சிகள் பேசியிருக்கிறதா? அவர்கள் வாக்குகளை குறிவைக்கிறார்கள். நாங்கள் நாட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். எங்களுக்கும் அவர்களுக்கும் 1000 கி.மீ தூரம் இருக்கிறது. எங்களுக்கு இந்த நிலத்தில் போட்டியே கிடையாது. 2010 இல் கட்சியை தொடங்கும்போதே இந்திய திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தேன்.

சீமான்
சீமான்

நான்கு பொதுத்தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் எல்லாவற்றிலும் தோற்று இன்னமும் தனித்துப் போட்டி போடும் இயக்கம் நாம் தமிழர் மட்டுமே. இந்திய அளவில், உலகளவில் இப்படி எந்தக் கட்சியுமே கிடையாது. விஜய்க்கும் எனக்கும் கொள்கையில் நிறைய தூரம் இருக்கிறது. நீங்கள் பெரியாரை கொள்கை வழிகாட்டி என்கிறீர்கள். தமிழை சனியன் என்றும், காட்டுமிராண்டி மொழி என்றும் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்களா?' என்றார் காட்டமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`மகாராஷ்டிரா எங்கள் பணத்தில் வாழ்கிறது..!' - தாக்கரே சகோதரர்களை விமர்சித்த பாஜக எம்.பி

மகாராஷ்டிராவில் வாழும் வெளிமாநிலத்தவர்கள் கட்டாயம் மராத்தி பேசவேண்டும் என்று ராஜ் தாக்கரே எச்சரித்துள்ளார். மராத்தி பேசமாட்டேன் என்று சொன்ன தொழிலதிபர் அலுவலகத்தை ராஜ் தாக்கரே கட்சி தொண்டர்கள் தாக்கி ச... மேலும் பார்க்க

ரஷ்யா: கருவுறும் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,00,000 நிதி - புதின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள்... மேலும் பார்க்க

``நாங்கள் கூட்டணி அமைத்தால் மட்டும் பாஜக மதவாத கட்சியா?'' - ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

"மிசாவில் உங்களை கைது செய்தவர்களுடன் நீங்கள் கூட்டணி வைக்கலாம்.. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் என்ன தவறு" என்று ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னி... மேலும் பார்க்க

'நான் யாருன்னு தெரியல?' - திடீரென விசாரித்த அமைச்சர்... தெரியாமல் விழித்த அரசு பேருந்து ஊழியர்கள்

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் அவ்வப்போது திடீரென்று ஆய்வு செய்து பயணிகளின் குறைகளை கேட்டறிந்து வருவதை தனது அலுவல்களில் ஒன்றாக வைத்துள்ளார். அந்த வகையில், கோவையில் உள்ள கொடீச... மேலும் பார்க்க

'முருகர் மாநாட்டை நடத்திய பெருமை எங்களுக்கே உண்டு!' - அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்!

'திருச்செந்தூர் குடமுழுக்கு!'திருச்செந்தூர் முருகன் கோயிலின் குடமுழுக்கு வெகு விமர்சையாக நடந்து முடிந்திருக்கிறது. குடமுழுக்கு முடிந்த பிறகு அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அப... மேலும் பார்க்க