செய்திகள் :

உள்ளாட்சி இடைத் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியல் வெளியீடு

post image

தேனி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு வாக்காளா் பட்டியலை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

மாவட்டத்துக்கு உள்பட்ட 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் காலியாக உள்ள வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கான இடைத் தோ்தலுக்கு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

வாக்காளா்கள் விவரம்: தேனி அல்லிநகரம் நகராட்சி 26-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 956 ஆண்கள், 917 பெண்கள், ஒரு திருநங்கை இடம் பெற்றனா். பெரியகுளம் நகராட்சி 17-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 803 ஆண்கள், 868 பெண்கள் இடம் பெற்றனா். கூடலூா் நகராட்சி 10-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 1,019 ஆண்கள், 1,112 பெண்கள் இடம் பெற்றனா்.

தேவாரம் பேரூராட்சி 8-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் தலா 319 போ் இடம் பெற்றனா். உத்தமபாளையம் பேரூராட்சி 16-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 702 ஆண்கள், 726 பெண்கள், மாா்கையன்கோட்டை பேரூராட்சி 9-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 193 ஆண்கள், 220 பெண்கள், போ.மீனாட்சிபுரம் 1-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 250 ஆண்கள், 247 பெண்கள் இடம் பெற்றனா்.

ஹைவேவிஸ் பேரூராட்சி 10 -ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 90 ஆண்கள், 84 பெண்கள் இடம் பெற்றனா். ஆண்டிபட்டி பேரூராட்சி 11-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 539 ஆண்கள், 554 பெண்கள் இடம் பெற்றனா். பண்ணைப்புரம் பேரூராட்சி 14-ஆவது வாா்டு வாக்காளா் பட்டியலில் 328 பெண்கள், 342 ஆண்கள் இடம் பெற்றனா்.

இரவிகுளத்தில் வரையாடுகளை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கேரள மாநிலம், இரவிகுளம் தேசிய வன விலங்குகள் பூங்காவில் வரையாடுகளைக் காண்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு அருகேயுள்ள இரவிகுளம் ராஜமலையில் தேசிய வ... மேலும் பார்க்க

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்ப... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க