செய்திகள் :

உ.பி: ``குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம்..'' - பாஜக அமைச்சர் அறிவித்த திட்டமும், விளக்கமும்!

post image

"உங்கள் குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம் வருகிறது" - இது அம்புலி மாமா கதையின் ஒரு வரி அல்ல, மீரட்டில் இதைத் திட்டமாக தொடங்கப்படவிருப்பதாக அறிவித்தார் உத்தரபிரதேச பாஜக அமைச்சர் தரம்பால் சிங்.

ஆனால், இந்த திட்டத்தில் சிறிய பிரச்னை இருப்பதாகக் கூறியுள்ளார்.

குப்பையில் இருந்து தங்கம்

நரேந்திர பிரதாப் என்ற ஊடகவியளாலர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் உ.பியின் உத்தரப்பிரதேசத்தின் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சர், "வடிகால்களில் போடப்படும் குப்பைகளை, இலைகளை சுத்தப்படுத்தக் கூறியிருக்கிறோம். ஈரமான குப்பைகளை உடனடியாக அகற்றவில்லை என்றால், அவை வடிகாலில்தான் போய் சேரும். அதனால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி, சுத்தமான சூழலில் இருங்கள்.

இங்கே குப்பைகளைத் தங்கமாக மாற்றும் திட்டம் இருக்கிறது. அதற்கான இயந்திரம் தயாராகி வருகிறது. அதில் சில பிரச்னைகள் உள்ளன, அவை சரியானதும் மீரட்டில் குப்பையிலிருந்து தங்கம் எடுக்கப்படும்" எனப் பேசியுள்ளார்.

அகிலேஷ் யாதவ் விமர்சனம்

இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்வினைகள் வந்தன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், அமைச்சரை விமர்சித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

அவரது எக்ஸ் தள பதிவில், "குப்பைகளை தங்கமாக மாற்றும் இயந்திரம் குறித்துப் பேசுவதற்கு முன்பு, கனௌஜில் (ஒரு ஊரின் பெயர்) ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள பால் தொழிற்சாலையை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருமானத்துக்கு வழிசெய்யுங்கள்" என எழுதியுள்ளார்.

மேலும், பாஜகவின் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், குப்பைகளை அகற்றும் பணியிலிருந்து கமிஷன் சம்பதிப்பதைக் குறித்து இப்படி குறியீடாகப் பேசுவதாகவும் கூறியுள்ளார் அகிலேஷ் யாதவ்.

"நேர்மையின்மை குறித்து இவ்வளவு நேர்த்தியாக பேசுவதற்கு பாஜக தலைவர்களை பாராட்டத்தான் வேண்டும். இந்த பேச்சுகளை எல்லாம் கேட்க உத்தரபிரதேசத்துக்குக் கொடுத்து வைத்திருக்கிறது" என நக்கலாகப் பேசியுள்ளார்.

பாஜக தரப்பு விளக்கம்!

அமைச்சர் தரம்பால் சிங், குப்பைகளை உரமாக மாற்றி அதிலிருந்து செல்வத்தைப் பெற முடியும் என்பதையே அப்படிப் பேசினார் என பாஜக ஆதரவாளர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

அமைச்சர் தரம்பால் சிங்கும் தனது எக்ஸ் தளத்தில் NTPC ஆலை மூலம் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்துப் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்து ஓட்டுநர்களுக்கு ஹார்ட் அட்டாக்; முதலுதவி தெரியாத நடத்துனர்கள், தமிழக அரசு கவனத்திற்கு..!

சமீப காலங்களாகவ பேருந்து ஓட்டுனருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, பேருந்துகள் விபத்திற்குள்ளாகும் காட்சிகளையும், பேருந்தை இயக்கிய ஓட்டுநர்‌ மரணிக்கும் காட்சிகளையும் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க... மேலும் பார்க்க

``ஜம்மு & காஷ்மீரின் சுற்றுலா, வளர்ச்சி முக்கியமானது.." - பஹல்காமில் உமர் அப்துல்லா பேசியதென்ன?

'பஹல்காம்' என்ற வார்த்தையை அவ்வளவாகக் கேட்டிராத இந்தியா மற்றும் உலக நாடுகள், கடந்த மாதம் ஏப்ரல் 22-ம் தேதிக்குப் பிறகு, அந்தப் பெயரை அடிக்கடி உச்சரித்து வருகின்றன. ஆம்... பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

Golden Dome: ``61 பில்லியன் டாலர் தர வேண்டாம்'' - ட்ரம்ப் அழைப்பு; அமெரிக்கா உடன் இணையுமா கனடா?

'கோல்டன் டோம்' - அமெரிக்காவை பாதுகாக்க 175 பில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்படும் புதிய ராணுவக் கட்டமைப்பு இது. இதற்கான ஒப்புதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வழங்கியுள்ளார். இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகண... மேலும் பார்க்க

Doctor Vikatan: சருமத்தில் கருந் திட்டுகள், க்ரீம்கள் போட்டு பலனில்லை.. உணவுப்பழக்கம் உதவுமா?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக சருமத்தில்ஆங்காங்கே கருந்திட்டுகள் தெரிகின்றன. என்னென்னவோ க்ரீம்கள் உபயோகித்தும் பலனில்லை. சருமத்தில் காணப்படும் கருமையான திட்டுகள், நிற மாற்றங்களைப் போக்க உ... மேலும் பார்க்க

``ஆந்திரா இன்று என்ன யோசிக்கிறதோ, அதை நாளை இந்தியா யோசிக்கும்!'' - சந்திரபாபு நாயுடு பேச்சு

ஆந்திரா மாநிலத்தை ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்தின் மூன்று நாள் மாநாடு நேற்று கடப்பாவில் தொடங்கியது. அப்போது பேசிய ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு...ரூபாய் நோட்டுகள் வேண்டாம்! "இப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

`Putin Playing with Fire' ட்ரம்ப் பதிவுக்கு ரஷ்யாவின் பதிலடி.. `மூன்றாம் உலகப் போர்' எச்சரிக்கையா?

'என்னுடைய நண்பர் தான்... நான் பேசுகிறேன்', 'போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்கு உதவுகிறேன்', 'நான் இல்லாமல் புதின் எப்படி வருவார்?' என்று தன் நண்பரான ரஷ்ய அதிபர் புதினை விட்டுக்கொடுக்காமல் பேசி வந்தார் ... மேலும் பார்க்க