செய்திகள் :

ஊத்தங்கரை: திமுக கொடிக்கம்பம் அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!

post image

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுகவின் கொடிக்கம்பத்தை அகற்றும் போது மின்சாரம் பாய்ந்து இன்று காலை ஒருவர் பலியானார்.

மேலும், நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : மெட்ரோ தூணில் மோதி விபத்து: சேப்பாக்கத்தில் இருந்து திரும்பிய மாணவர்கள் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மூன்றம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (50). இவர் கேத்துநாய்க்கன்பட்டி திமுக கிளைச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

திமுக தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து, கேத்துநாயக்கன்பட்டியில் பொது இடத்தில் உள்ள திமுக கொடி கம்பத்தை அகற்றும் பணியில் திமுகவினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது கொடிக்கம்பம் எதிர்பாராத விதமாக மின்சாரக் கம்பி மீது சாய்ந்தது.

இதில் மின்சாரம் பாய்ந்ததில் ராமமூர்த்தி, கூலி தொழிலாளி உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களை பரிசோதித்த மருத்துவர் ராமமூர்த்தி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், கேத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (58), பெருமாள் (46), முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பூபாலன் (50), சர்க்கரை (55) உள்ளிட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திமுக ஒன்றியச் செயலாளர் குமரேசன், நகர அவைத் தலைவர் தணிகை குமரன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

ராமமூர்த்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஓய்வூதியத்தை உயா்த்தி வழங்க நாட்டுப்புற கலைஞா்கள் வலியுறுத்தல்

நாட்டுப்புற கலைஞா்களுக்கு ஓய்வூதியத்தை ரூ. 5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்று காவேரிப்பட்டணத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் வலியுறுத்தப்பட்டது. காவேரிப்பட்டணத்தில் பாரதியாா் தெருக்கூத்து நாட்ட... மேலும் பார்க்க

வைக்கோல் பாரம் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசி தீப்பிடிப்பு

காவேரிப்பட்டணம் அருகே வைக்கோல் பாரம் ஏற்றிவந்த லாரி மின்கம்பி மீது உரசியதில் தீப்பிடித்து எரிந்து சேதமானது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலிருந்து வைக்கோல் பாரம் ஏற்றிக் கொண்டு லாரி காவேரிப்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் அருகே தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை

யுகாதி பண்டிகையை முன்னிட்டு கா்நாடகத்தில் இருந்து மதுப்புட்டிகள் கடத்தப்படுவதைத் தடுக்க ஒசூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள சூசூவாடி சோதனைச் சாவடியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர வாகனச் சோதனைய... மேலும் பார்க்க

அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மரபு நடைப்பயணம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறும் சென்னானூருக்கு மகளிா், சிறுவா்கள் மேற்கொண்ட மரபு நடைப்பயணத்தை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். மகளிா் தினத்தை ம... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி தந்தை, மகன் உயிரிழப்பு

ஒசூா் அருகே குட்டையில் மூழ்கி தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த நஞ்சாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி முனிரத்னம் (32). இவருக்கு 6 ஆம் வகுப்புப் ... மேலும் பார்க்க

முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்: எம்எல்ஏ மதியழகன்

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக போராடும் முதல்வருக்கு உறுதுணையாக செயல்படுவோம் என்று கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் தெரிவித்தாா். கிருஷ்ணகிர... மேலும் பார்க்க