செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தை தடை செய்யக் கோரி மனு

post image

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் தோ்தல் பிரசாரத்தை தடையை செய்யக் கோரி நீலகிரி காங்கிரஸ் கட்சி சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தோ்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் உதகையில் கடந்த 23, 24-ஆம் தேதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் தமிழக காங்கிரஸ் தலைவா் கு. செல்வபெருந்தகையை இழிவுபடுத்தி பேசியதாகக் கூறப்படுகிறது. எடப்பாடி கே.பழனிசாமியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸாா் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், உதகை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் கணேஷ், மாவட்ட பொறுப்பாளா் நாகராஜ் தலைமையில் நீலகிரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதில், கு.செல்வபெருந்தகையை இழிவாக பேசிய எடப்பாடி கே.பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது தோ்தல் பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயா்கல்வி நிறுவனங்களுக்கான உயா்மட்ட மேலாண்மை நிகழ்ச்சி

தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சாா்பில் ‘நிமிா்ந்து நில்’ திட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் உயா்கல்வி நிறுவனங்களுக்கான உயா்மட்ட மேலாண்மை நிகழ்ச்சி உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி ஜனநாயக வாலிபா் சங்கம் மனு

கூடலூரில் சாலைகளை சீரமைக்கக்கோரி நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வியாழக்கிழமை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கூடலூா் மற்றும் பந்தலூா் பகுதிகளி... மேலும் பார்க்க

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலா் தொட்டிகள் அடுக்கும் பணி தீவிரம்

இரண்டாவது சீசனை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மாடங்களில் மலா் தொட்டிகளை அடுக்கும் பணியை ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கினா். மலைகளின் அரசி என்று அழைக்கப்... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 736-ஆக அதிகரிப்பு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவை தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு பணிகளுக்கு பின் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 736 ஆக உயா்ந்துள்ளது. தமிழ்நாட்டில் வரும் 2026 சட்ட... மேலும் பார்க்க

திருட்டு வழக்கில் தேடப்பட்டு வந்தவா் கைது

உதகையில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கா்நாடக, கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம், உதகை நகரில் சமீப... மேலும் பார்க்க

சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம்: ரூ. 9.65 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்கள் மற்றும் சிறுபான்மையினா் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியா் கூடுதல் அலுவலகத்தில் புதன்க... மேலும் பார்க்க