காங்கிரஸ் சாா்பில் திருப்பரங்குன்றத்தில் இன்று மத நல்லிணக்க வழிபாடு
எதிரணியின் முதுகுத்தண்டை உடைத்தை கோலி..! பாகிஸ்தானுடனான போட்டியை நினைவூகூர்ந்த பாண்டியா!
2022 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் ஹாரிஸ் ராஃப் ஓவரில் 2 சிக்ஸர்கள் அடித்த விராட் கோலியை ஹார்திக் பாண்டியா பாராட்டி பேசியுள்ளார்.
2022 டி20 உலகக் கோப்பையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 159/8 ரன்கள் எடுக்க அடுத்து விளையாடிய இந்திய அணி கடைசி பந்தில் 160/6 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் விராட் கோலி 18.5, 18.6ஆவது பந்தில் பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஓவரில் நம்பமுடியாத 2 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
53 பந்துகளில் 82 ரன்கள் அடித்த கோலி வெற்றிக்கு வித்திட்டார். இந்த சிக்ஸர் குறித்து ஐசிசி உடனான நேர்காணலில் ஹார்திக் பாண்டியா நெகிழ்சியாகப் பேசியுள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் பிப்.23ஆம் தேதி துபையில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்.19இல் தொடங்கி மார்ச்.9ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நிலையில் ஹார்திக் பாண்டியா பேசியதாவது:
பரவசத்தினால் உண்மையான உணர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் 90-100 ஆயிரம் மக்களுக்கு மத்தியில் எதிரணியின் முதுகுத்தண்டை உடைக்கும் அளவுக்கான ஒரு ஷாட்டை விராட் கோலி அடித்ததை மறக்கவே முடியாது.
நீங்கள் சண்டையிட விரும்பும்போதும் பசியுடன் இருக்கும்போதும் நிறைய விஷயங்கள் அதுவாகவே நமக்கு சாதகமாக நடக்கும். அதுமாதிரி இந்தப் போட்டி வரலாற்றில் எப்போதும் இருக்கும்.
நான் களத்தில் சென்றபோது ரசிகர்கள், பார்வையாளர்களின் ஆற்றலைப் பார்க்கும்போது எனக்கு அற்புதமான ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் இந்தக் கூட்டங்களுக்கு பழகிவிட்டேன். அதிகமான பார்வையாளர்கள் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே அந்தமாதிரி ஒரு சூழ்நிலை எப்போதும் உருவாகும்.
பல ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் போட்டி இருந்து வருகிறது. அதேசமயத்தில் எவ்வளவோ உணர்ச்சிகள், மோதல்கள், ஆச்சரியங்கள் இருந்துள்ளன. இந்தப் போட்டிகாக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றார்.