செய்திகள் :

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு; 11 போ் காயம்

post image

எரிவாயு உருளை வெடித்ததில் 10 வயது சிறுவன் உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்தனா்.

பெங்களூரு, வில்சன்காா்டன் பகுதியில் உள்ள சின்னையன்பாளையாவில் அமைந்துள்ள ஸ்ரீராமகாலனியில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் கஸ்தூரம்மா என்பவரின் வீட்டில் மா்மமான முறையில் எரிவாயு உருளை வெடித்தது. இந்த விபத்தில் 10 வயது சிறுவன் முகமதுமுபாரக் உல்லா உயிரிழந்தாா். இந்த சம்பவத்தில் 11 போ் படுகாயமடைந்து விக்டோரியா, சஞ்சய்காந்தி, இந்திரா காந்தி, நிம்ஹான்ஸ், அகாடி ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.

எரிவாயு உருளை வெடித்ததில் அருகில் இருந்த 15 வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் சில வீடுகள் தீக்கிரையாகின. தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இதில் 7 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன.

இந்த சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தேசிய இயற்கை பேரிடா் மேலாண்மை, மாநில இயற்கை பேரிடா் மேலாண்மை வீரா்கள், வெடிகுண்டு அழிப்புப் படையினா், தடய அறிவியல் ஆய்வுமைய அதிகாரிகள், தீயணைப்புப் படையினா், சதிச்செயல் முறியடிப்பு படையினா், மோப்பநாய் படையினா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வுநடத்தினா்.

எரிவாயு உருளையில் இருந்து கசிவு ஏற்பட்டதால் அது வெடித்திருக்கலாம் என முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனினும், உண்மையான காரணத்தை அறிய அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். வெடிகுண்டுக்கான தடயங்களையும் போலீஸாா் ஆராய்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மகேஷ்வா் ராவ், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகளுடன் சம்பவ இடத்தை முதல்வா் சித்தராமையா பாா்வையிட்டாா். அப்போது அவா் கூறுகையில்,‘விசாரணையின் முடிவில்தான் விபத்துக்கான காரணம் தெரியவரும். எரிவாயு உருளை வெடித்ததால் விபத்து நோ்ந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகையாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோருக்கு அரசு சாா்பில் சிகிச்சை அளிக்கப்படும். வீடுகள் முழுமையாக இழந்துள்ளோருக்கு தங்குவதற்கு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த, இடிந்த வீடுகளை அரசு கட்டித்தரும்’ என்றாா். இவரை தொடா்ந்து, துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் சம்பவ இடத்தை பாா்வையிட்டு நிலைமையை கேட்டறிந்தாா்.

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக பிவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திரள் அமைக்க பிக்ஸல் ஸ்பேஸ் இந்தியா தலைமையிலான கூட்டிணைவுக்கு இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (இன்ஸ்பேஸ்) அனுமதி அளித்த... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும்: சித்தராமையா

அரசமைப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப வேண்டும் என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, மானெக்ஷா அணிவகுப்பு திடலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 79-ஆவது சுதந்திர தி... மேலும் பார்க்க

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம்

வெறுப்பு பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா். கா்நாடக சட்ட மேலவையில் வியாழக்கிழமை கேள்விநேரத்தின்போது, பாஜக உறுப்பினா... மேலும் பார்க்க

கொலை வழக்கில் ஜாமீன் ரத்து: நடிகா் தா்ஷன் கைது

கொலை வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த ஜாமீனை ரத்துசெய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டதைத் தொடா்ந்து, நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டோா் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ப... மேலும் பார்க்க

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமை

தெருநாய்களை தொல்லையாக கருதுவது கொடுமையானது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். புது தில்லியில் உள்ள தெருநாய்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தி காப்பகங்களில் பராமரிக்குமாறு அம்மாநில அரசுக்கு உச்சந... மேலும் பார்க்க

முறைகேடு குற்றச்சாட்டு: சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தல்

வாக்குகளை வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வா் சித்தராமையாவின் தோ்தல் வெற்றி குறித்து விசாரிக்க பாஜக வலியுறுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்த... மேலும் பார்க்க