செய்திகள் :

எலி கடித்து இறந்த குழந்தைகள்: ``இந்தூரில் நடந்தது விபத்து அல்ல கொலை..!" - அரசை விமர்சிக்கும் ராகுல்

post image

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரின் மகராஜா யஸ்வந்த்ராவ் மருத்துவமனையின் (MYH) தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) புதிதாகப் பிறந்த இரண்டு குழந்தைகளை விரல், தலை, தோள்பட்டை பகுதியில் எலிகள் கடித்திருக்கின்றன.

அதைத் தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்த MYH துணை கண்காணிப்பாளர் டாக்டர் ஜிதேந்திர வர்மா, ``பிறந்த இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையின் எடை வெறும் 1.6 கிலோ மட்டுமே இருந்தது.

எலி கடி
எலி கடி

பல பிறவி குறைபாடுகள் உட்பட குடல் பிரச்னைகளும் இருந்தன. அதற்காக கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னரும் செப்டிசீமியா நோய் வந்து உயிரிழப்பு ஏற்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையில், `இந்தூரின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் அரசு சுகாதார அமைப்பின் மோசமான நிலையை வெளிக்காட்டுகிறது' என எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் விமர்சித்தனர்.

அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இரண்டு செவிலியர்களை பணியிடை நீக்கம் செய்து, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்தூரில் மத்திய பிரதேசத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையில் இரு புதிதாகப் பிறந்த குழந்தைகள் எலிகள் கடித்து இறந்தது - இது விபத்து அல்ல, இது நேரடியான கொலை.

இந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது, மனிதாபிமானமற்றது மற்றும் உணர்வற்றது, இதைக் கேட்டாலே உள்ளம் நடுங்குகிறது.

ஒரு தாயின் மடியில் இருந்து அவளது குழந்தை பிரிக்கப்பட்டிருக்கிறது. அரசு தனது மிக அடிப்படையான பொறுப்பையே நிறைவேற்றவில்லை.

எலி கடி
எலி கடி

சுகாதாரத் துறையை வேண்டுமென்றே தனியார் கைகளில் ஒப்படைத்துவிட்டனர் - அங்கு இப்போது சிகிச்சை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, ஏழைகளுக்கான அரசு மருத்துவமனைகள் உயிர் கொடுக்கும் இடங்கள் அல்ல, மரணத்தின் கூடாரங்களாக மாறிவிட்டன.

நிர்வாகம் எப்போதும் போல் "விசாரணை நடக்கும்" எனச் சொல்கிறது.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பாதுகாப்பைக் கூட நீங்கள் உறுதி செய்ய முடியவில்லை என்றால், அரசு நடத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

பிரதமர் மோடி மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர் வெட்கத்தால் தலை குனிய வேண்டும்.

உங்கள் அரசு நாட்டின் கோடிக்கணக்கான ஏழைகளிடம் இருந்து சுகாதார உரிமையைப் பறித்துவிட்டது - இப்போது தாயின் மடியில் இருந்து குழந்தைகளையும் பறிக்கத் தொடங்கிவிட்டது.

மோடி அவர்களே, இந்த குரல் இன்று அரசின் அலட்சியத்திற்கு பலியாகி வரும் லட்சக்கணக்கான தாய் தந்தையர்களின் சார்பாக எழுந்து வருகிறது. என்ன பதில் சொல்வீர்கள்?

நாங்கள் மௌனமாக இருக்க மாட்டோம். இந்த போராட்டம் ஒவ்வொரு ஏழையின், ஒவ்வொரு குடும்பத்தின், ஒவ்வொரு குழந்தையின் உரிமைக்கானது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

சங்ககிரி: 15 ஆண்டுகளாக உறங்கும் `புதிய' பேருந்து நிலையம்; 16-வது ஆண்டிலாவது மக்களுக்கு உதவுமா?!

சேலம் மாவட்டம், சங்ககிரியில் சுமார் ரூபாய் 95 லட்சத்தில் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ரூபாய் 154.60 லட்சம் செலவில் திறப்பு விழா... ஆனால் மக்கள் பயன்பாடு இல்லாத, மக்களின் வரிப்பண கட்டடம். எதுவென சிந்தி... மேலும் பார்க்க

``2026-ல் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார், ஆனால்; ஓபிஎஸ், டிடிவி இருவரும்'' - அண்ணாமலை கணிப்பு

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் 'அதிமுக' வை ஒன்றிணைப்போம் என வி.கே. சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதிகார பலத்தை விட்டுக்கொடுக... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையன் சொல்வது நல்லதுதான்; அரசியலில் எதுவும் நடக்கலாம்'' - பாஜக நயினார் நாகேந்திரன்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

ADMK: ``செங்கோட்டையனின் வேண்டுகோள்; நாங்களும் அதற்காகதான் போராடிக் கொண்டிருக்கிறோம்'' -ஓபிஎஸ் பதில்

செங்கோட்டையை செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேரணும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்... மேலும் பார்க்க

``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்

சசிகலா, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோரை அ.தி.மு.க-வில் சேர்க்க முடியாது என்று கறாராக ஓரம் கட்டிவிட்டு, பல்வேறு முரண்பாடுகளுடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து 2026 தேர்தலை சந்திக்கலாம் என்று வியூகம் ... மேலும் பார்க்க

``பெரியாருக்கு என் கையால் சோறு பரிமாறியிருக்கிறேன்'' - லண்டனில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஒரு வார பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.இந்தப் பயணத்தின் போது, லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தோட்ட தரணியின் கை ... மேலும் பார்க்க