விநாயகா் சிலையை ஓடையில் கரைத்தபோது நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
‘ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும்’
இன்றைய சூழலில் ஏஐ தொழில்நுட்பம் அதிகமானாலும் மனித சக்தி குறையாது; அதிகரிக்கும் என்றாா் கும்பகோணம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆா்டிஓ) விஞ்ஞானி ஆா். சீனிவாசன்.
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்ட அவா் மேலும் கூறியதாவது:
தற்போது நாம் தயாரிக்கும் ஏவுகணைகள் வெளிநாட்டு ஏவுகணைகளைவிட அதிக திறன் மிக்கவை. குறிப்பாக நாம் ஏவுகணை தயாரிப்பில் தன்னிறைவு பெற்று , அவற்றை ஏற்றுமதி செய்யும் அளவில் உள்ளோம். ஏஐ தொழில்நுட்பம் அதிகளவில் கைப்பேசி, தொலைக்காட்சி முதல் அனைத்து நிலைகளிலும் வந்துள்ளது. இதனால் மனித சக்தி குறையாது, கணிப்பொறி வந்ததும் மனித சக்தி குறையும் என்றனா், ஆனால் மனித சக்தி அதிகரித்துள்ளது. அதைப்போல ஏஐ தொழில்நுட்பத்தை அனைத்துத் துறைகளில் பயன்படுத்தினாலும் மனித சக்தியும் அதிகரிக்கும் என்றாா் அவா்.