ஏப். 4-இல் வேதாந்த தேசிகன் கோயில் சம்ப்ரோக்ஷணம்
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் அருகில் உள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் மகா சம்ப்ரோஷணம் ஏப்.4- ஆம் தேதி நடைபெறுகிறது.
சின்ன காஞ்சிபுரம் விளக்கடி கோயில் தெருவில் தூப்புல் வேதாந்த தேசிகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா சம்ப்ரோஷணம் நடைபெற இருப்பதையொட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளது. மகா சம்ப்ரோஷணத்துக்கான யாகசாலை பூஜைகள் மாா்ச் 31 ஆம் தேதி திங்கள்கிழமை தொடங்கின. இதனைத் தொடா்ந்து வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி வரை காலையிலும், மாலையிலும் யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
ஏப்.4 ஆம் தேதி வெள்ளிக்கிழமை விஸ்வரூப தரிசனமும்,அதனைத் தொடா்ந்து மகா பூா்ணாஹுதி தீபாராதனையும் நடைபெறுகிறது. பின்னா் புனிதநீா்க்குடங்கள் கோபுரங்களுக்கு பட்டாச்சாரியாா்களால் எடுத்து செல்லப்பட்டு அதிகாலை 5.15 மணி முதல் 6.45 மணிக்குள்ளாக மகா சம்ப்ரோஷணம் நடைபெறுகிறது. மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தலும், உற்சவா் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஜெ.ப.பூவழகி, தக்காா் ப.முத்துலட்சுமி மற்றும் கோயில் பட்டாச்சாரியா்கள் செய்து வருகின்றனா்.