ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்
ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் வகையில் காய்கறி விதைகள் தொகுப்பு, பழப் பயிா்கள் விதைகள் தொகுப்பு வழங்கும் பணியை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஒட்டன்சத்திரம் வேளாண்மை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் விவசாயிகள், பொதுமக்களுக்கு பயிறு, பழ, காய்கறிகள் விதை தொகுப்புகளை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்தம் வழங்கினாா். இந்த நிகழ்வில் ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநா்கள் கே.செல்லமுத்து, சந்திரமாலா, உதவி வேளாண்மை அலுவலா்கள் நல்லமுத்து ராஜா, கலையரசன், ஜெயபாலன்,சிவசுப்பிரமணி, கவிபிரகாஷ், திமுக ஒன்றியச் செயலா்கள் இரா. ஜோதீஸ்வரன், தி. தா்மராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.