ஒன்பிளஸ் 15 சிறப்பம்சங்கள் என்னென்ன?
இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரிதான கேமரா வடிவமைப்பும், பேட்டரி திறனும் மக்களைக் கவரும் அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், இந்திய பிரீமியம் பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை வழங்கி வருகிறது.
அந்தவகையில், புதிதாக ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் வருகை, பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் பயனர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஒன்பிளஸ் 15 இருக்கும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணமாக உள்ளது.
எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் தனது வழக்கமான வட்ட வடிவிலான கேமரா வடிவமைப்பில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, சதுர வடிவிலான கேமரா அமைப்பும், நான்கு புறங்களிலும் வளைந்த வடிவிலான முனை அமைக்கப்படும்.
புதிய வண்ணங்களில் கருப்பு, ஊதா மற்றும் டைட்டானியம் நிறத்தில் வெளியாகும்.
பல்வேறு வேரியன்ட்களில் உருவாகும். 12GB உள் நினைவகத்துடன் 256GB அல்லது 512GB நினைவகம், 16GB உள் நினைவகத்துடன் 256GB அல்லது 512GB நினைவகம் வழங்கப்படும்.
அதிகபட்சமாக 16GB உள் நினைவகத்துடன் 1TB நினைவகம் கொடுக்கப்படும்.
குவால்கம் ஸ்நாப்டிராகன் 8 எலைட் 2 அல்லது ஸ்நாப்டிராகன் 8 எலைட் 5ஆம் தலைமுறை புராசஸர் இருக்கலாம்.
7000mAh பேட்டரி திறனுடன் 100W சார்ஜர் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க | 5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?