செய்திகள் :

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை; வீட்டைப் பறித்த வங்கிதான் காரணமா? விசாரணையில் பகீர் தகவல்

post image

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் காரில் தற்கொலை செய்து கொண்டனர்.

காரில் உயிரோடு இருந்த நபரும் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். ஒரே நேரத்தில் 7 பேர் தற்கொலை செய்திருந்தனர்.

இறந்தது பிரவின் மித்தல் என்பவரது குடும்பம் என்று தெரிய வந்துள்ளது. அவர்கள் தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் மற்றும் அவர்களின் உறவினர்களிடம் விசாரித்தபோது தற்கொலைக்கான காரணம் குறித்துத் தெரிய வந்துள்ளது.

மித்தல் குடும்பம்
மித்தல் குடும்பம்

பிரவின் எழுதி வைத்திருந்த கடிதத்தில் தனது உறவினர் சந்தீப் அகர்வால் தங்களது இறுதிச்சடங்கைச் செய்யவேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதோடு சந்தீப் அகர்வாலிடம் கடந்த 5 நாட்களுக்கு முன்புதான் பிரவின் மித்தல் போனில் தொடர்பு கொண்டு பேசினார்.

போலீஸாரின் விசாரணையில், இமாச்சல் பிரதேசத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழைய இரும்பு தொழிற்சாலை ஒன்றை பிரவின் தொடங்கினார்.

ஆனால் அந்த தொழிற்சாலையைக் கடன் கொடுத்திருந்த வங்கிகள் பிடுங்கிக்கொண்டன.

இதனையடுத்து டெக்ராடூன் புறப்பட்டுச் சென்றார். சில ஆண்டுகள் குடும்பத்தோடு தொடர்பு இல்லாமலும் இருந்தார். இந்த காலகட்டத்தில் அவரது கடன் 20 கோடியாக அதிகரித்தது.

இதனால் அங்கிருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானாவிற்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பிரவின் பஞ்ச்குலாவில் உள்ள தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து டாக்சி ஓட்டினார்.

அங்கேயும் அவரது இரண்டு வீடு மற்றும் அவரது வாகனத்தையும் வங்கிகள் பறித்துக்கொண்டன.

மித்தல் குடும்பம்
மித்தல் குடும்பம்

எனவேதான் பிரவின் தனது குடும்பத்தோடு ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு டெக்ராடூனுக்குத் திரும்பிச் செல்லும்போது காரிலேயே அனைவரும் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்களது கார் பஞ்ச்குலாவின் நேற்று நள்ளிரவு தனியாக நின்றது. அதனைப் பார்த்த உள்ளூர்வாசி காருக்கு வெளியில் ஒருவர் மட்டும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விசாரித்தார். விசாரணையைத் தொடர்ந்து காரை சோதனை செய்து பார்த்தபோதுதான் உள்ளே 6 பேர் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

சென்னை: வீட்டு ஓனரிடம் ரூ.97 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஃபைனான்ஸியர் கைது; பின்னணி என்ன?

சென்னை பெரம்பூர் ராஜவேலு தெருவில் வசித்து வருபவர் ஹேமமாலினி (56). இவருக்குச் சொந்தமாக காரப்பாக்கம் தென்றல் நகரில் வீடு உள்ளது.அந்த வீட்டை சுபாஷ் சந்த் ஜெயின் என்பவரிடம் அடமானம் வைத்து 50 லட்சம் ரூபாயை... மேலும் பார்க்க

மும்பை: திருமண ஆசையில் ரூ.57 லட்சத்தை இழந்த 73 வயது மூதாட்டி; 62 வயது முதியவருக்கு வலைவீச்சு

மும்பையையொட்டி இருக்கும் தானே டோம்பிவலியில் வசிக்கும் 73 வயது மூதாட்டி திருமண வரன் தொடர்பாக ஒரு விளம்பரத்தை பேப்பரில் பார்த்தார்.அதில் 62 வயது நபர் தன்னைத் திருமணம் செய்து கொள்ளப் பெண் தேவை என்று குறி... மேலும் பார்க்க

மனநிலை பாதித்தவருக்கு மருந்து கடையில் பணியா? - பாட்டி கேள்வி; பாலியல் புகாரில் தப்பியவர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா அருகில் இருக்கிறது ஜகதீஷ்புரா. கடந்த 18-ம் தேதி இந்தப் பகுதியில் இருக்கும் கோயில் அருகில் ஐந்து வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுமி காணாமல் போ... மேலும் பார்க்க

மும்பை: வீட்டை எழுதிக்கொடுக்க மறுத்த தந்தை; கட்டையால் கால்களை அடித்து உடைத்த மகன்; என்ன நடந்தது?

மும்பையில் தனது பெயருக்கு வீட்டை எழுதிக்கொடுக்காததால் தந்தையின் காலை அவரது மகன் அடித்து உடைத்துள்ளார்.மும்பை தகிசர் கிழக்குப் பகுதியில் வசிப்பவர் விஜய் (73). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன... மேலும் பார்க்க

கடந்த மாதம் தற்கொலை செய்த மனைவி; சோகத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு - திருச்சி சோகம்

திருச்சி, இ.பி ரோடு, வேதாத்திரி நகர், அந்தோணி கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் விஜய் என்கிற டோரி விஜய் (28). இவர், ஆட்டோ ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரின் மனைவி கடந்த மாதம் 26- ம் தேதி மன அழுத்தம் ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை., பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு... மாணவி புகார் டு இறுதி வாதம் - இதுவரை நடந்தது என்ன?

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி தெரிவித்த பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் எதிரான வழக்கில் சென்னை மகளிர் நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.சென்னை அண்ணா பல்கலைக்கழக ... மேலும் பார்க்க