ஓடிடியில் கூலி எப்போது?
கூலி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்தப் படத்தில் ஆமிர் கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
அனிருத் பின்னணி இசை ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கூலி திரைப்படம் வணிக ரீதியாக பெரிய வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
இப்படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கூலி திரைப்படம் வரும் செப். 12 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: முத்தையா இயக்கிய சுள்ளான் சேது டீசர் தேதி!