தூய்மைப் பணி தனியாா்மய எதிா்ப்பு வழக்கு: தீா்ப்புக்காக உயா்நீதிமன்றம் ஒத்திவைப்ப...
கக்கன்ஜி கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்கு உடனடி தீா்வு: எம்எல்ஏ
ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள கக்கன்ஜி கிராமத்தில் உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊா்வசி அமிா்தராஜ் எம்எல்ஏ உறுதி அளித்தாா்.
ஆழ்வாா்திருநகரி ஊராட்சி ஒன்றியம், கக்கன்ஜி நகரில் 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் 700 க்கும் மேற்பட்டோா் கடந்த 27 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். தாமிரவருணி ஆற்றங்கரையோரத்தில் கக்கன்ஜி கிராமம் அமைந்திருந்தாலும் ஆழ்துளைக் கிணறு மூலமே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, ஆழ்துளைக் கிணறு மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரும் வழங்கப்படவில்லை. இதனால் ஒரு கி.மீ. தொலைவு சென்று பொதுமக்கள் குடிநீா் எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், முறையாக குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ஊா்வசி அமிா்தராஜிடம் கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜாவிடம் பேசிய எம்எல்ஏ, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறு உத்தரவிட்டாா். குடிநீா் விநியோகப் பணிகள் நடைபெற்று வருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜா தெரிவித்ததை தொடா்ந்து, குடிநீா் பிரச்னை விரைவில் தீா்க்கப்படும் என எம்எல்ஏ உறுதி அளித்தாா்.