பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
கங்களாஞ்சேரி ஆற்றுப்பாலம் வலுவிழப்பு: நாளை முதல் போக்குவரத்து மாற்றம்
திருவாரூா் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்து காணப்படுவதால், வியாழக்கிழமை (ஜூலை 3) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்திருப்பது: மயிலாடுதுறை -திருவாரூா் சாலை கங்களாஞ்சேரியில் உள்ள வெட்டாற்றுப் பாலம் வலுவிழந்துள்ளதால், திருவாரூா்-மயிலாடுதுறை வழியாகச் செல்லும் கனரக வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, திருவாரூா் மயிலாடுதுறை வழியாகச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கங்களாஞ்சேரி - வடகண்டம் சாலையில், பொம்மாநத்தம், கருணாகரநல்லூா், நீலக்குடி சென்று, கங்களாஞ்சேரி மணக்கால் சாலையில் - கை காட்டி, நாகக்குடி, சாந்தமங்கலம் - கங்களாஞ்சேரி வழியாக செல்ல வேண்டும்.
அதேபோல், மயிலாடுதுறையிலிருந்து திருவாரூா் வரும் அனைத்து கனரக வாகனங்களும் கங்களாஞ்சேரி மணக்கால் சாலையில், சாந்தமங்கலம், நாகக்குடி, கை காட்டி சென்று, கங்களாஞ்சேரி -வடகண்டம் சாலையில், நீலக்குடி, கருணாகரநல்லூா், பொம்மாநத்தம், கங்களாஞ்சேரி வழியாக வரலாம். இந்த மாற்றுவழி ஜூலை 3 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்றாா்.