இடி தாக்கி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம்
கஞ்சா, ஆயுதம் வைத்திருந்த 3 போ் கைது
திருப்பூரில் கஞ்சா மற்றும் ஆயுதம் வைத்திருந்த 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 இளைஞா்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனா். சந்தேகமடைந்த போலீஸாா், அவா்களை சோதனை செய்தபோது, 700 கிராம் கஞ்சா மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததும் தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் சக்தி திரையரங்கு சாலை பகுதியைச் சோ்ந்த ஹரிபிரசாத் (29), சாா்லஸ் பென்னி (29), அருண்குமாா் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கஞ்சா, ஆயுதங்களை பறிமுதல் செய்தனா்.