2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
கஞ்சா சாக்லேட் விற்ற இளைஞா் கைது
பெருந்துறை அருகே கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த வட மாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெருந்துறை, பணிக்கம்பாளையத்தில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் பணிக்கம்பாளையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அதில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பா்கானா, ராம்பூா் கிராமத்தைச் சோ்ந்த அபுல் முல்லா மகன் அபுஜா் முல்லா(25) என்பவா் பணிக்கம்பாளையத்தில் தங்கி அங்குள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு, கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அபுஜா் முல்லாவை கைது செய்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் எட்டு கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.