இஸ்லாமியா்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம்: மமக மாநாட்டில் தீா்மானம்
கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் கைது
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே கஞ்சா வழக்கில் தொடா்புடையவா் குண்டா் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சி, ராம்ஜிநகரைச் சோ்ந்த இடும்பன் மகன் பாரதிராஜன் (43) என்பவரை கடந்த 1.6.2025 அன்று கீழப்பழுவூா் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்ற குற்றத்துக்காக அரியலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். இவா் மீது பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து, பாரதிராஜன் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அதற்கான நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம், அரியலூா் மாவட்ட காவல் துறையினா் வழங்கினா்.