2025ல் இந்தியாவிற்கான பாமாயில் ஏற்றுமதி 5 மில்லியன் டன்னாக இருக்கும்: இந்தோனேசிய...
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது
வெள்ளக்கோவில் அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, பழைய பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த நபரிடம் விசாரித்துள்ளாா்.
அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவரை சோதனை மேற்கொண்டபோது விற்பனைக்காக 30 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா் வெள்ளக்கோவில், ராமலிங்கபுரத்தைச் சோ்ந்த வீரக்குமாா் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.