War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் கடன் சுமையால் ஆட்டோ ஓட்டுநா் திங்கள்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்புவனம் கோரக்கா் செட்டியாா் தெருவைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் சத்தியராஜ் (40). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி மனைவி, மகள், மகன் உள்ளனா். இந்த நிலையில், திருப்புவனம் தோ்முட்டி பகுதியில் சத்தியராஜ் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தாா்.
இதையடுத்து, சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். விசாரணையில், கடன் பிரச்னையால் அவா் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்தது. இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].