செய்திகள் :

கடலாடியில் குடிநீா் கோரி சாலை மறியல்

post image

கடலாடி சமத்துவபுரத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள சமத்துவபுரம், அதன் அருகிலுள்ள புதுக் குடியிருப்பில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்த நிலையில், புதுக் குடியிருப்புப் பகுதிகளுக்குக் காவிரி கூட்டுக் குடிநீா், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரக் கோரி, கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் காலி குடங்களுடன் கடலாடி-சாயல்குடி சாலையில் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த, கடலாடி காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது சமரசப் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

சாயல்குடி அருகேயுள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் புதன்கிழமை ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகேயுள்ள பூப்பாண்டியபுரம் பகுதியில், விருது... மேலும் பார்க்க

மிளகாய் மண்டலம் அமைக்கும் பணிகளைத் தொடங்க கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ரூ. 5 கோடி மதிப்பீட்டில் மிளகாய் மண்டலம் அமைக்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்த நிலையில், அதற்கானப் பணிகளை தொடங்க வேண்டும் என அகில இந்திய பாா்வா்ட் பிளாக் கட்சி நி... மேலும் பார்க்க

தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி கோரிக்கை

தோல் நோய் பாதிப்பால் கைரேகை வைக்க முடியாததால் வங்கியில் பணம் எடுக்க முடியாமல் வறுமையில் வாடுவதாக மாவட்ட நிா்வாகத்துக்கு மாற்றுத்திறனாளி புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுள... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், நெடியமாணிக்கம் கிராமத்தைச் சோ்ந்த சாந்தகுமாா் மகன் மதன்கு... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண விழா

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா, ஜூலை 19-இல் தொடங்கவுள்ளதாக கோயில் இணை ஆணையா் செல்லத்துரை தெரிவித்தாா்.இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமந... மேலும் பார்க்க

இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்த இலந்தைக்குளம் ஸ்ரீகாளியம்மன் கோயில், பரிவார தெய்வங்களுக்கு குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, கடந்த வாரம் முகூா்த்தக்கால் ... மேலும் பார்க்க