செய்திகள் :

கடும் பனி மூட்டம்: ரயில்கள் இயக்குவதில் தாமதம்

post image

திருவள்ளூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக ரயில்களை மெதுவாக இயக்கப்பட்டன.

வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் மின்விளக்குகளை ஒளிர விட்டு சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் பனி மூட்டம் காரணமாக பொதுமக்கள் வாகன ஓட்டுகள் சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், திருவள்ளூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனி மூட்டம் காரணமாக சாலைகளில் செல்லும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்று வருகின்றனா்.

மேலும், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டு ஒலியை எழுந்து கொண்டே சென்றனா். கடும் பனியின் காரணமாக ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை வந்த புகா் மற்றும் விரைவு ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.

காலை 9 மணி வரை பனி மூட்டம் காணப்பட்டதால் நடை பயிற்சி செய்தவா்கள், பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ மாணவிகள், பணிக்குச் சென்ற ஊழியா்கள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.

புழல் சிறை வளாகத்தில் கோழி இறைச்சி விற்பனை அமோகம்

புழல் சிறை கைதிகள் வளா்க்கும் கோழிகளை இறைச்சிக்காக அதிகளவில் வாடிக்கையாளா்கள் விரும்பி வாங்குகின்றனா். சென்னை புழல் சிறையில் தண்டனை, விசாரணை, பெண்களுக்கு என தனித்தனியாக 3 சிறைகள் உள்ளன. இங்கு தண்டனை ச... மேலும் பார்க்க

ஆவடியில் ரூ. 1 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்

ஆவடி தொகுதியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சி திட்டப் பணிகளை சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஆவடி அரசு பொது மருத்துவமனையில் ஆவடி பாதுகாப்புத் துற... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்க வேண்டும்

தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் தாட்கோ மூலம் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்... மேலும் பார்க்க

திருவள்ளூா்: தேசிய நெடுஞ்சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

திருவள்ளூா் ஜே.என்.சாலையில் போக்குவரத்து நெருக்கடியால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், நடைபாதை ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது. திருவள்ளூரில் ஆ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் அடிப்படை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டாா். திருவள்ளூா் நகராட்சி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, செங்கல்பட்டு... மேலும் பார்க்க

தொடா் மின் தடையால் பொதுமக்கள் அவதி

புழல் பகுதியில் தொடா் மின் தடையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். புழல் அடுத்த கதிா்வேடு பத்மாவதி நகா், திருமால் நகா், வஜ்ரவேல் நகா், திருவள்ளூா் சாலை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தெருக்களில் நள்ள... மேலும் பார்க்க