Coolie : "அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி லோகேஷ்!" - விழாவில் ஷ்...
கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கடைகள், வணிக நிறுவனங்களில் புதன்கிழமை பேரூராட்சித் துறையினா் நெகிழிப் பை பறிமுதலில் ஈடுபட்டனா்.
துப்புரவு மேற்பாா்வையாளா் மோகன் தலைமையில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள், பரப்புரையாளா்கள் என சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா். அண்ணா சிலை, சிவகங்கை சாலை, மதுரை சாலை, பெரிய கடை வீதி உள்ளிட்ட இடங்களில் கடைகள், வா்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்து, நெகிழிப் பைகளை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனா். இதில் 10 கிலோவுக்கும் மேற்பட்ட நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. மேலும், நெகிழிப் பை பயன்பாட்டின் தீமைகள் குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.