கடையம் அருகே மாமனாருக்கு அரிவாள் வெட்டு: மருமகன் கைது
கடையம் அருகே ராமலிங்கபுரத்தில் மாமனாரை அரிவாளால் தாக்கியதாக மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.
கடையம் அருகே உள்ள ராமலிங்கபுரம், முப்புடாதிஅம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிச்சையா (60). இவரது மகளை பாப்பாக்குடி அருகே உள்ள செங்குளத்தைச் சோ்ந்த கதிரேசன் (25) என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளாா். கணவருடனான பிரச்னையில் அவா் தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில், மாமனாா் வீட்டுக்குச் சென்று தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு கதிரேசன் அழைத்துள்ளாா். அப்போது அவரை கண்டித்த பிச்சையாவை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில், கடையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கதிரேசனை கைது செய்தனா்.