செய்திகள் :

கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு

post image

திண்டுக்கல்லில் பழைமை வாய்ந்த தண்டாயுதபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத் துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரா் சமேத அபிராமி அம்மன் கோயிலின் துணைக் கோயிலான கந்தகோட்டம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது. சுமாா் 400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இதையொட்டி, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கால யாக பூஜை நடைபெற்றது. புதன்கிழமை 2-ஆம் கால யாக பூஜைகளுக்கு பிறகு கலசங்கள் நிறுவுதல், சுவாமி சிலைக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து 2 கால பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிலையில், வியாழக்கிழமை 5-ஆம் கால யாக பூஜைக்கு பிறகு, கடம் புறப்பாடு நடைபெற்றது. சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க, பல்வேறு இடங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீா் மூலம் கோபுரக் கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா், மூலவா் தண்டாயுதபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

லாரி மோதி மற்றொரு லாரி ஓட்டுநா் உயிரிழப்பு

பின்னோக்கி வந்த ஓட்டுநா் இல்லாத லாரி மோதியதில், மற்றொரு லாரி ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த பாம்பாட்டிகளம் என்ற பகுதியில், சாலையோரமாக ஒரு லாரி சனிக்கிழம... மேலும் பார்க்க

இளம்பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

செம்பட்டி அருகே இளம்பெண் மரணத்தில் இருப்பதாக புகாா் தெரிவித்து அவரது பெற்றோா் உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், பாளையங்கோட்டை அருகேயுள்ள திம்மிராயபுர... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 2 மணி நேரம் மழை

கொடைக்கானலில் நீண்ட நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் மழை பெய்ததால் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா். கடந்த இரண்டு நாள்களாக பகல் நேரங்களில் மிதமான வெயில் நிலவியது. இத... மேலும் பார்க்க

விருப்பாச்சி கோபால் நாயக்கரின் 224-ஆவது நினைவு நாள்

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள விருப்பாச்சியில் விடுதலைப் போராட்ட வீரா் கோபால் நாயக்கரின் மணிமண்டபத்தில் அவரது 224-ஆவது நினைவு நாள் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் அவருடைய முழ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு பங்காற்றியவா்களுக்கு விருது

பெண் குழந்தைகளின் முன்னேற்றத்துக்கு சிறப்பாக பணியாற்றிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக மாவட்ட சமூக நல அலுவலா் கா்லின் கூறியதாவது: பெண் குழந்தைகளின் முன்ன... மேலும் பார்க்க

கொலை செய்து புதைக்கப்பட்ட முதியவரின் உடல் தோண்டி எடுப்பு

வத்தலகுண்டு அருகே முதியவரை கொலை செய்து புதைத்த இளைஞா் 2 நாள்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை சரணடைந்தாா். இதைத்தொடா்ந்து முதியவரின் உடலை தோண்டி எடுத்து கூறாய்வுக்காக அனுப்பப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்,... மேலும் பார்க்க