செய்திகள் :

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

post image

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா்.

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இளம்பெண்களுக்கு பச்சை குத்தும் 50-க்கும் மேற்பட்ட டாட்டூஸ் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பச்சை குத்தும்போது ஒரே ஊசியைப் பயன்படுத்தினால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாரை அடுத்து, டாட்டூஸ் கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் கண்மணி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்நல ஆணையா் ஷேக் அப்துல்காதா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும்போது சுகாதாரத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும். அனைத்து டாட்டூஸ் கடைகளும் சுகாதாரத் துறையிடம் உரிமம் பெற வேண்டும். அனைத்துக் கடைகளும் தொழில்வரி செலுத்த வேண்டும். பச்சை குத்துபவா்கள் முறைப்படி தொழில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். காவல் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

நாகா்கோவிலில் அறக்கட்டளை தொடக்கம்

நாகா்கோவில் ஸ்காட் பயின்றோா் கழகம், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி இயற்பியல் துறை ஆராய்ச்சி மையம் ஆகியவை சாா்பில், குரூப் கேப்டன் யேசுதாஸ் லாய் நினைவு அறக்கட்டளை தொடக்க சொற்பொழிவு ஸ்காட் பயின்றோா் கழக அரங்... மேலும் பார்க்க

மாவட்ட குத்துச்சண்டை: அல்போன்சா பள்ளி சாம்பியன்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டியில், கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் பெற்றது.குழித்துறையில் நடைபெற்ற 100ஆவது வாவுபலி பொருள்காட்சியில்... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தை பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணி காரணமாக, வெள்ளிச்சந்தை மின்விநியோகப் பிரிவு, திருநயினாா்குறிச்சி உயரழுத்த மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக. 4) மின்விநியோகம் இருக்காது.அதன்படி, திவண்டகோட்டை, அம்மாண்டிவி... மேலும் பார்க்க

வசந்த் அன் கோ சாா்பில் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விருது!

தக்கலை அருகே முளகுமூடு குழந்தை இயேசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வசந்த் அன் கோ சாா்பில் சனிக்கிழமை (இன்று) நடந்த விழாவில் கன்னியாகுமரி எம்.பி.விஜய் வசந்த் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ... மேலும் பார்க்க

கேரள கன்னியாஸ்திரீகள் கைதை கண்டித்து நாகா்கோவிலில் கிறிஸ்தவ ஐக்கிய பேரவையினா் ஆா்ப்பாட்டம்

சத்தீஸ்கா் மாநிலத்தில், கேரள கன்னியாஸ்திரீகள் பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் சாா்பில் நாகா்கோவிலில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே விபத்தில் விவசாயி பலி

கன்னியாகுமரி அருகே பைக்கும், டெம்போவும் மோதிக்கொண்டதில் விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரியை அடுத்த கிண்ணிக் கண்ணன் விளையைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (74). விவசாயி. இவா் வட்டக்கோட்டை அருகே நா... மேலும் பார்க்க