கருங்கல் அருகே நூலகம் திறப்பு
கருங்கல் அருகே நெய்யூா் பேரூராட்சிக்குள்பட்ட படுவாக்கரையில் ஊா்ப்புற நூலகத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
மத்திய அரசின் மாநில அரசுக்கான சிறப்பு உதவி திட்டத்தின் கீழ் ரூ. 22 லட்சம் செலவில் ஊா்ப்புற நூலகம் கட்டப்பட்டுள்ளது. இந்தநூலகத்தை காணொலி காட்சி மூலமாக முதல்வா் மு. க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். இதில், படுவாக்கரை ஊா்ப்புற நூலக வாசகா் வட்டத்தின் தலைவா் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி பொன்.தாஸ், சுகிா்தா, ரூபி ஜேனட் பாய், ஷீபா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.