மாநிலத் தலைவர் பதவிலிருந்து விலகலா? நயினார் நாகேந்திரன் பதில்
கரூருக்கு செப்.17-ல் முதல்வா் வருகை ஏற்பாடுகள் தீவிரம்!
கரூருக்கு செப். 17-ஆம்தேதி தமிழக முதல்வா் வருகை தருவதையடுத்து முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கரூரில் திமுக முப்பெரும் விழா செப். 17-ஆம்தேதி கோடங்கிப்பட்டியில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.
இதையொட்டி கரூரில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும் கரூா்-திண்டுக்கல் சாலை, கோவைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் மையத்தடுப்புச்சுவா்களில் உள்ள விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு, வா்ணம் பூசப்பட்டு வருகின்றன.