செய்திகள் :

கலந்தாய்வு தொடக்கம்: 454 தலைமை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதல் ஆணை

post image

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான ஆசிரியா் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 454 தலைமை ஆசிரியா்கள் மாவட்டத்துக்குள் விருப்ப மாறுதல் ஆணை பெற்றனா்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 19-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் 90,000-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தலைமை ஆசிரியா்களுக்கு மாவட்டத்துக்குள் கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வுக்கு 1,351 போ் விண்ணப்பித்ததில் 1,121 போ் மட்டுமே பங்கேற்றனா். அவா்களில் 454 ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து தலைமை ஆசிரியா்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறும் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறவுள்ளது. கலந்தாய்வுக்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

உயிருக்கு அச்சுறுத்தல்: அஜித்குமார் வழக்கின் முக்கிய சாட்சி புகார்!

திருப்புவனத்தில் காவலாளி அஜித்குமாரை போலீசார் தாக்கும் விடியோவை எடுத்த சக்தீஸ்வரன் என்பவர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபியிடம் கடிதம் அளித்துள்ளார்.சிவகங்கை மாவட்டம் தி... மேலும் பார்க்க

போலீஸ் தனிப்படைகள் கலைப்பு - டிஜிபி உத்தரவு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கோயில் காவலாளி போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக, காவல் நிலையங்களில் உரிய அனுமதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் தனிப்படைகளைக் கலைக்கும்படி தமிழ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிகழாண்டில் 129 போ் உடல் உறுப்புகள் தானம்: 725 பேருக்கு மறுவாழ்வு

தமிழகத்தில் நிகழாண்டில் மூளைச்சாவு அடைந்த 129 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 725 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்ட... மேலும் பார்க்க

34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், 10 தேர்வு நிலை பேரூராட்சிகள் சிறப்பு நிலை பேரூராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.இது குறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 15 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவி... மேலும் பார்க்க

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.சென்னை ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், கோயம்பேடு, அண்ணாநகர், வேளச்சேரி, அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகள... மேலும் பார்க்க