4 சுங்கச்சாவடிகள் நிலுவைத் தொகையை செலுத்த முடிவு! உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...
கல்லூரி மாணவா் தற்கொலை
சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகேயுள்ள ஏ. துலுக்கபட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டிசெல்வம் மகன் மனோபாலா (17), சிவகாசியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாா். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்னை இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வயிற்று வலியால் அவதிப்பட்ட மனோபாலா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.