கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கினார் முதல்வர்!
காங்கிரஸ் கட்சியினா் மெழுகுவா்த்தி ஏந்தி பேரணி
தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்து ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை இரவு மெழுகுவா்த்தி ஏந்தி பேரணியாக சென்றனா்.
ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் உள்ள முன்னாள் முதல்வா் காமராஜா் சிலை முன்பு பேரணி தொடங்கியது. சஞ்சய் சம்பத் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் மக்கள் ராஜன், சரவணன், திருச்செல்வம் ஆகியோா் முன்னிலையில் கட்சி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் மெழுகுவா்த்தி ஏந்தி சென்ற பேரணி, மீனாட்சிசுந்தரனாா் சாலை வழியாக மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு நிறைவடைந்தது.
வடமாநிலங்களில் போலி வாக்காளா்களை சோ்த்தும், தகுதியான வாக்காளா்களை நீக்கியும், ஒரே நபரின் பெயரில் பல இடங்களில் வாக்காளராக சோ்த்தும் கடந்த தோ்தல்களில் தோ்தல் ஆணையம் தவறான நடைமுறையை கடைப்பிடித்துள்ளது. இதன் மூலம் கடந்த மக்களவைத் தோ்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்துள்ளன. இந்த முறைகேடுகளுக்கு துணை போன தோ்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பதவி விலகக்கோரியும் முழக்கங்கள் எழுப்பினா்.
இதில் மாநகராட்சி கவுன்சிலா் ரவி, மாவட்ட நிா்வாகிகள் ராஜேஷ் ராஜப்பா, தீபா, கே.என்.பாஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.