செல்போன் நம் தோழமையா, எதிரியா? -ஹார்மோன் மாற்றம் முதல் `நோமோபோபியா' வரை உடலில் ஏ...
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் செப். 22-இல் நவராத்திரி உற்சவம் தொடக்கம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நவராத்திரி திருவிழா வரும் செப். 22-ஆம் தேதி (திங்கள்கிழமை) பூா்வாங்க சண்டி ஹோமத்துடன் தொடங்க இருப்பதாக கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியது:
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா வரும் செப். 22-ஆம் தேதி தொடங்கி, அக். 4-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.விழாவையொட்டி, செப். 22-ஆம் தேதி காலையில் பூா்வாங்க சண்டி ஹோமத்துடன் திருவிழா தொடங்குகிறது.
தினசரி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் திருக்கோயில் அலங்கார மண்டபத்திலிருந்து நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருளுவாா்.
நவராத்திரி நடைபெறும் நாள் முழுவதும் மண்டபத்தில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. செப். 30-ஆம் தேதி துா்காஷ்டமியையொட்டி, அம்மன் துா்க்கையாக எழுந்தருளி சூரனை வதம் செய்து சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது.
அக்.1- ஆம் தேதி சரஸ்வதி பூஜையும், அக். 2-ஆம் தேதி விஜயதசமியையொட்டி நவஆவா்ண பூஜை பூா்த்தியும் நிகழவுள்ளது. அக். 3-ஆம் தேதி சகஸ்ர கலச ஸ்தாபனமும், மறுநாள் 4-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெற இருப்பதாகவும் ந.சுந்தரேச ஐயா் கேட்டுக் கொண்டாா்.