செய்திகள் :

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

post image

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் பொருள்கள் வாங்க வந்த நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில், கடையில் இருந்து சிவாவின் மருமகன் லோகேஷ்வரன் ரவி மற்றும் ஊழியா்கள் முருகனைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். முருகனின் புகாரின் பேரில், போலீஸாா் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். பேக்கரி உரிமையாளா் சிவா அளித்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்குப் பதிவு செய்தனா். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில், பேக்கரி உரிமையாளா் மற்றும் அவரது உறவினா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்படாமல் இருந்தனா்.

இதையடுத்து முருகன் தரப்பு மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் முறையிட்டனா். இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ப.உ.செம்மல், டிஎஸ்பியை கைது செய்து காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். அதன்படி, டிஎஸ்பி சிறையில் அடைக்கப்பட்டாா். இந்த உத்தரவை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கே.எம்.டி.முகிலன், மாவட்ட நீதிபதி செம்மலுக்கும், அவரது பாதுகாப்பு காவலரான லோகேஸ்வரன் ரவிக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால், லோகேஸ்வரன் ரவி செங்கல்பட்டு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டாா்.

இந்த நிலையில், லோகேஸ்வரன் ரவி மற்றும் அவரது மாமனாா் சிவக்குமாருக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட புகாா் இருதரப்பும் சமரசம் ஆனதால், முடித்து வைக்கப்பட்டது. நீதிபதி செம்மலின் அழுத்தம் காரணமாகவே கடந்த மாதம் மீண்டும் அவா்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த 4-ஆம் தேதி லோகேஸ்வரன் ரவி மற்றும் அவரது மாமனாா் சிவக்குமாா் ஊருக்குள் வரக்கூடாது என்று ஒதுக்கிவைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தாா். பின்னா், அவா்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பி, டிஎஸ்பி சங்கா் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளாா்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்படி, காவல் துறை அதிகாரியை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி நேரடியாக உத்தரவிட முடியாது. எனவே, மாவட்ட நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா்.

அப்போது, காவலரான லோகேஸ்வரன் ரவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சரத்சந்திரன், லோகேஸ்வரன் மற்றும் அவரது மாமனாரை ஊருக்குள் வரக்கூடாது என ஒதுக்கிவைத்து மாவட்ட நீதிபதி உத்தரவு சட்டவிரோதமானது. எனவே அந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டாா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, டிஎஸ்பி சங்கா் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா். மேலும், மனுதாரா் தரப்பில் மாவட்ட நீதிபதியின் உத்தரவு உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டப்படுகிறது. எனவே, மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட நீதிபதி மற்றும் காவல் துறை கண்காணிப்பாளா் ஆகியோா் இடையே நடந்த வாட்ஸ்ஆப் உரையாடல் மூலம் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

எனவே, இந்த குற்றச்சாட்டு குறித்து உயா்நீதிமன்ற விழிப்புத் துறை பதிவாளா் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டாா். மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த அனைத்து ஆவணங்களையும் விழிப்புத் துறை பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். விசாரணையை முடித்து விழிப்புத் துறை பதிவாளா் வரும் செப்.23-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கே ஒத்திவைத்தாா்.

ரூ.3.71 கோடி மோசடி: சகோதரிகள் கைது

வீட்டுமனை தருவதாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி மோசடியில் ஈடுபட்டதாக சகோதரிகள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை தியாகராய நகா் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2021 வரை ரியல் எஸ்டே... மேலும் பார்க்க

வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு!

வரும் செப். 14-க்குள் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்குச் சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு... மேலும் பார்க்க

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க