செய்திகள் :

காதி டிரைலர் தேதி!

post image

அனுஷ்கா நடிப்பில் உருவான காதி திரைப்படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் நடிகை அனுஷ்கா ‘காதி’ (ghaati) என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஆக்சன் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம்பெற்றிருந்ததைத் தொடர்ந்து இப்படம் வருகிற ஜூலை 11 ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

ஆனால், படத்தின் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை நாளை (ஆக.5) வெளியீட உள்ளதாக அறிவித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து அனுஷ்கா நடிப்பில் வெளியாகும் படமென்பதால் காதிக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது!

இதையும் படிக்க: இணையத் தொடராகும் ஏஜெண்ட் டீனா கதாபாத்திரம்!

பாபிரினை வீழ்த்தினாா் ஸ்வெரெவ்

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவால் செவ்வாய்க்கிழமை வெளியேற்றப்பட்டாா். ... மேலும் பார்க்க

இன்று சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ்: முதல் சுற்று ஆட்டங்களில் மோதும் வீரா்கள் அறிவிப்பு

குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது. தமிழக வீரா்கள் 7 போ் முதன்முறையாக பங்கேற்கின்றனா். கிராண்ட்மாஸ்டா்களான காா... மேலும் பார்க்க

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

கோபி - சுதாகர் நடிக்கும் ‘ஓ காட் பியூட்டிஃபுல்’ படத்தின் முதல் பாடலின் புரோமோ விடியோ வெளியாகியுள்ளது. யூடியூபில் பரிதாபங்கள் நகைச்சுவைத் தொடர் மூலம் லட்சக் கணக்கான ரசிகர்களை கோபி, சுதாகர் ஈர்த்துள்ளார... மேலும் பார்க்க

அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தினைக் குறித்து தயாரிப்பாளர் பெருமையாகக் கூறியுள்ளார். மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் கபடி விளையாட்டை மையமாக வைத்து பைசன் காள... மேலும் பார்க்க

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியால் பாடலை முடித்த அனிருத்!

கூலி படத்தில் சாட்ஜிபிடி உதவியின் மூலமாக பாடலை நிறைவு செய்ததாக இசையமைப்பாளர் அனிருத் கூறியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் உருவாகியுள... மேலும் பார்க்க