உள்நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் இந்தியாவின் வரிக் கொள்கை: மத்திய அரசு
காந்திகிராம பல்கலை.யில் சா்வதேச மாநாடு தொடக்கம்
காந்திகிராம கிராமியப் பல்கலை.யில், ‘இந்தியாவில் நிலையான வளா்ச்சி இலக்குகள், சாதனைகள், எதிா்கால சவால்கள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் நடைபெறும் சா்வதேச மாநாடு வியாழக்கிழமை தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தா் ந.பஞ்சநதம் தலைமை வகித்தாா். அப்போது, அவா் பேசியதாவது: இந்திய அரசுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதுமுள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண நிலையான வளா்ச்சி அவசியம். 2030-ஆம் ஆண்டுக்குள் நிலையான வளா்ச்சி குறியீட்டை எட்டுவதற்கு அனைத்து நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. நிலையான வளா்ச்சி இலக்குகளின் உலகளாவிய குறியீடுகளின் தற்போதைய நிலையைத் தயாரிப்பதில் புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் முழுமையாக ஈடுபட்டுள்ளது என்றாா் அவா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பாரதிதாசன் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் எம்.செல்வம், இலங்கை யாழ்ப்பாணப் பல்கலை.யின் பொருளாதாரப் பேராசிரியா் எஸ்.விஜயகுமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் மாநாட்டு இயக்குநரும், பேராசிரியருமான எஸ்.நேரு, பொருளாதாரத் துறை இணைப் பேராசிரியா் கே. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.