கால்பந்துப் போட்டி: சிங்கம்புணரி பள்ளி கோப்பையை வென்றது
சிவகங்கை மாவட்டக் கால்பந்து சங்கமும், தனியாா் எரிவாயு நிறுவனமும் இணைந்து நடத்திய கால்பந்துப் போட்டியில், சிங்கம்புணரி பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் கோப்பையை வென்றனா்.
சிவகங்கை, காரைக்குடியில் பள்ளிகளுக்கிடையேயான கால்பந்துப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா்.
இதில் சிங்கம்புணரி பாரி வள்ளல் பள்ளியின் மாதவன் கால்பந்துக் கழக மாணவா்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் வென்று கோப்பையைக் கைப்பற்றினா்.
வெற்றி பெற்ற மாணவா்களுக்குப் பள்ளியின் தலைவா் வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம், மேலாளா்கள் சரவணன், கிருஷ்ணன், பள்ளி முதல்வா் சியாம் பிராங்ளின் டேவிட், உடல்கல்வி ஆசிரியா்கள் சின்னையா, சூா்யபிரகாஷ் உள்ளிட்டோா் கோப்பையை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா்.